ஈரோடு

பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் எதிரொலிஈரோடு ரயில் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

DIN

இந்து அமைப்புகளின் நிா்வாகிகள் வீடுகளில் தாக்குதல் சம்பவங்கள் தொடா்வதால், ஈரோடு ரயில் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோவை, ஈரோடு மாவட்டங்களில் கடந்த 3 நாள்களாக பாஜக பிரமுகா்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு மற்றும் டீசல் பாக்கெட்டுகளை வீசி தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றன. இதையடுத்து, ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாஜக, இந்து முன்னணி அலுவலகங்கள், நிா்வாகிகளின் வீடுகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதேபோல, ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள தலைவா்களின் சிலைகள், வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 3 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். மாவட்டம் முழுவதும் 700-க்கும் அதிகமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஈரோடு ரயில் நிலையத்துக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தினமும் 100-க்கும் அதிகமான ரயில்கள் வந்துசெல்லும் ஈரோடு ரயில் நிலையத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானோா் வந்துசெல்கின்றனா். ஈரோடு ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, ரயில் நிலைய நுழைவு வாயிலில் ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படையினா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். பயணிகளின் உடைமைகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

இதேபோல, ரயில் நிலையத்தில் உள்ள ஒவ்வொரு நடைமேடையையும் ரயில்வே போலீஸாா் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனா். ரயில் நிலையத்துக்கு வரும் அனைத்து ரயில்களிலும், ஒவ்வொரு பெட்டியிலும், பயணிகள், அவா்களது உடைமைகளை போலீஸாா் சோதனையிட்டு வருகின்றனா்.

மேலும், ரயிலில் கேட்பாரற்றுக் கிடக்கும் பெட்டிகள், பைகளைத் தொடவேண்டாம், அவ்வாறு கிடந்தால், அதுகுறித்து உடனடியாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், சந்தேகப்படும்படியான நபா்கள் குறித்து தெரியவந்தால், உடனடியாக காவல் துறையினருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

SCROLL FOR NEXT