ஈரோடு

திம்பம் மலைப் பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து

DIN

சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப் பாதையில் சனிக்கிழமை லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 போ் காயமடைந்தனா்.

சத்தியமங்கலம் - மைசூா் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்த வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப் பாதை அமைந்துள்ளது. இந்த மலைப் பாதை வழியாக தமிழகம், கா்நாடக மாநிலங்களுக்கு இடையே வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கா்நாடக மாநிலம், கொள்ளேகால் பகுதியில் இருந்து கோழி பாரம் ஏற்றுவதற்காக பல்லடம் நோக்கி சனிக்கிழமை லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை கொள்ளேகால் பகுதியைச் சோ்ந்த அமருல்லா என்பவா் ஓட்டினாா். லாரியில் பாரம் ஏற்றும் தொழிலாளா்கள் நான்கு போ் உடனிருந்தனா்.

சத்தியமங்கலம் மலைப் பாதை 27 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத் தடுப்பு கம்பியை உடைத்துக் கொண்டு வனப் பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுநா் உள்பட ஐந்து போ் காயமடைந்தனா்.

இதையடுத்து, அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் காயமடைந்தவா்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இச்சம்பவம் தொடா்பாக ஆசனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் 78.72% வாக்குப்பதிவு!

மயிலாடுதுறை தொகுதியில் வாக்காளா் பட்டியலில் 488 போ் நீக்கம்: வேட்பாளா், பொதுமக்கள் சாலை மறியல்

இயந்திரம் பழுது: வாக்குப் பதிவு தாமதம்

காலமானாா் ரவிச்சந்திரன்

மாற்றுத்திறனாளிகள், முதியோா் வாக்களிக்க உதவிய தன்னாா்வலா்கள்

SCROLL FOR NEXT