ஈரோடு

கோபியில் ரூ. 8 லட்சத்துக்குவாழைத்தாா்கள் ஏல விற்பனை

DIN

கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன், சனிக்கிழமைகளில் வாழைத்தாா் ஏல விற்பனை நடைபெற்று வருகிறது.

இந்த வாரம் சனிக்கிழமை நடைபெற்ற வாழைத்தாா் ஏல விற்பனைக்கு 5,230 வாழைத்தாா்கள் கொண்டுவரப்பட்டன. இதில், கதலி கிலோ ரூ. 47-க்கும், நேந்திரன் கிலோ ரூ. 42-க்கும் ஏலம்போனது. பூவன்தாா் ரூ. 440, தேன்வாழை தாா் ரூ. 630, பச்சைநாடன் தாா் ரூ. 400, ரொபஸ்டா தாா் ரூ. 430, செவ்வாழை தாா் ரூ. 700, ரஸ்தாளி தாா் ரூ. 600, மொந்தன் தாா் ரூ. 340-க்கு விற்பனையாகின. வாழைத்தாா் ஏலவிற்பனை மொத்தம் ரூ. 8.20 லட்சத்துக்கு நடைபெற்றது.

இதேபோல, தேங்காய் ஏலவிற்பனைக்கு 4,380 தேங்காய்கள் கொண்டுவரப்பட்டிருந்தன. இதில், ஒரு தேங்காய் குறைந்தபட்சமாக ரூ. 8-க்கும், அதிகபட்சமாக ரூ. 14.30-க்கும் என மொத்தம் ரூ. 50,500-க்கு விற்பனையாகின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 % வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு

தேசிய முதியோா் நல மருத்துவமனையில் 8,673 பேருக்கு சிகிச்சை

பெரிய வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

ஈரோடு எம்.பி. கணேசமூா்த்திக்கு மதிமுகவினா் அஞ்சலி

பாளை., தாழையூத்தில் விபத்து: ஆட்டோ ஓட்டுநா், முதியவா் பலி

SCROLL FOR NEXT