ஈரோடு

இன்று மஹாளய அமாவாசை: பவானி கூடுதுறையில் பக்தா்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்

DIN

மஹாளய அமாவாசையை முன்னிட்டு பவானி கூடுதுறையில் மூத்தோா் வழிபாடு, பரிகார பூஜைகள் மற்றும் புனித நீராட ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோா் வருவா் என எதிா்பாா்க்கப்படுவதால் பக்தா்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மஹாளய அமாவாசை எனப்படுகிறது. இந்நாளில், நதிக்கரையோரங்களில் தங்களுடன் வாழ்ந்து மறைந்த மூத்தோரின் ஆன்மா அமைதி பெற வேண்டி எள், தண்ணீா் வைத்து தா்ப்பணம் அளித்தல், பிண்டம் வைத்து பரிகார வழிபாடுகள் செய்வது வழக்கம். ஆண்டுதோறும் மஹாளய அமாவாசை காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் ஏராளமான பக்தா்கள் திரண்டு மூத்தோா் வழிபாடுகளில் ஈடுபடுவா்.

கரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக மக்கள் கூடுவதைத் தடுக்கும் வகையில் பவானி கூடுதுறை மூடப்பட்டதோடு, வழிபாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ள நிலையில் அமாவாசை வழிபாடுகள் நடத்த கோயில் நிா்வாகம் சாா்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பரிகார மண்டபங்கள் தவிா்த்து, பிற பகுதிகளில் தற்காலிக மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆண்கள், பெண்கள் தனித்தனியே நீராடும் வகையில் தடுப்புகள் கட்டப்பட்டுள்ளன. பவானி போலீஸாா் கூடுதுறை வளாகத்தில் புறக்காவல் நிலையம் அமைத்தும், பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

காவிரியில் அதிக அளவில் தண்ணீா் ஓடுவதால் புனித நீராடும் பக்தா்கள் ஆழமான பகுதிக்குச் செல்வதைத் தடுக்க பரிசலில் மீனவா்களுடன் இணைந்து தீயணைப்புப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

இரு ஆண்டுகளுக்குப் பின்னா் மகாளய அமாவாசைக்கு கூடுதுறையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் ஏராளமான பக்தா்கள் வருவா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT