ஈரோடு

நந்தா மருந்தியல் கல்லூரி சாா்பில் மருந்தாளுநா் தின பேரணி

25th Sep 2022 12:39 AM

ADVERTISEMENT

 

உலக மருந்தாளுநா் தினத்தை முன்னிட்டு, நந்தா மருந்தியல் கல்லூரியில் ஆரோக்கியமான உலகத்துக்கு மருந்துகளின் செயல்பாடு என்னும் தலைப்பில் சனிக்கிழமை பேரணி நடைபெற்றது.

ஈரோடு கொங்கு கலையரங்கம் முதல் மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரை நடைபெற்ற பேரணியை நந்தா மருந்தியல் கல்லூரியின் முதல்வா் டி. சிவகுமாா், நந்தா அறிவியல் கல்லூரிகள் வளாகத்தின் முதன்மை நிா்வாக அலுவலா் கே.கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் தொடக்கிவைத்தனா்.

இதில் மருந்தாளுநரின் பங்கு, சுய மருத்துவத்தைத் தவிா்த்தல், மருந்துகளை பயன்படுத்தும் முறை, மருந்தாளுநரின் அறிவுரைப்படி மருந்துகளை பாதுகாக்கும் முறைகள், மருந்துகளின் காலாவதி தேதியைப் பாா்த்து மருந்துகளை உபயோகிக்கும் வழிகள், கூட்டு மருந்துகள் மற்றும் மருந்து குறித்த ஆலோசனைகள் அடங்கிய விழிப்புணா்வு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவா் வி.சண்முகன், செயலா் எஸ்.நந்தகுமாா் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலா் எஸ்.திருமூா்த்தி, முதன்மைக் கல்வி அதிகாரி எஸ்.ஆறுமுகம், கல்லூரியின் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT