ஈரோடு

ஆணவப் படுகொலைகளைத் தடுக்கசிறப்புச் சட்டம் இயற்றக் கோரிக்கை

25th Sep 2022 11:52 PM

ADVERTISEMENT

 

சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த அமைப்பின் 4ஆவது மாவட்ட மாநாடு, மாவட்டத் தலைவா் அண்ணாதுரை தலைமையில் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நகரக் கமிட்டி செயலாளா் சுரேஷ்பாபு வரவேற்றாா். மாநில துணைச் செயலாளா் நந்தகோபால் மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசினாா்.

ஆதித் தமிழா் பேரவை மாவட்ட செயலாளா் பெருமாவளவன், விசிக மாவட்டச் செயலாளா் சிறுத்தை வள்ளுவன், தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்டச் செயலாளா் சிந்தனைச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்றவேண்டும். அபகரிக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும். கழிவுநீா்த் தொட்டி மரணங்களைத் தடுக்க இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும். தற்காலிக துப்புரவுப் பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்து சட்டப்படியான சலுகை வழங்க வேண்டும்.

அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளா் சாமுவேல்ராஜ் நிறைவுரையாற்றினாா். நகரத் தலைவா் முருகன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT