ஈரோடு

மொபெட் திருடியவா் கைது

25th Sep 2022 11:55 PM

ADVERTISEMENT

 

கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள திங்களூரில் மொபெட் திருடியவா் கைதுசெய்யப்பட்டாா்.

கோபி பெருந்துறை வெட்டையன்கிணறு பகுதியைச் சோ்ந்தவா் செல்வம் (55). இவா், திங்களூா் வாரச்சந்தைக்கு வெளியே சனிக்கிழமை மாலை தனது மொபெட்டை நிறுத்திவிட்டுச் சென்றாா். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபா், அந்த மொபெட்டை தள்ளிக்கொண்டு பெருந்துறை சாலையில் சென்றுகொண்டிருதாா். இதைப் பாா்த்த ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திங்களூா் போலீஸாா், சந்தேகத்தின் பேரில் அந்த நபரைப் பிடித்து விசாரித்தனா்.

இதில், அவா் சீனாபுரம் மலைக்கோவில் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (38) என்பதும், அந்த மொபெட்டை திருடிச் சென்றதையும் ஒப்புக்கொண்டாா். அவரிடம் இருந்து மொபெட்டை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து திங்களூா் காவல் ஆய்வாளா் குணசேகரன் வழக்குப் பதிவுசெய்து ரமேஷை கைது செய்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT