ஈரோடு

மரத்தில் இருசக்கர வாகனம் மோதி 2 இளைஞா்கள் பலி

25th Sep 2022 11:55 PM

ADVERTISEMENT

 

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

நம்பியூா் செட்டியம்பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் மகன் காா்த்திக் (22), பாத்திர வியாபாரி. நம்பியூா் அருகேயுள்ள எலத்தூா் பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் சங்கா்குமாா் மகன் சங்கா் (23). காா்த்திக், சங்கா் இருவரும் நண்பா்கள். இவா்கள் கவுந்தப்பாடி குருமூா்த்தி காலனியில் உள்ள காா்த்திக்கின் உறவினா் வீட்டுக்கு சென்றனா். அங்கிருந்து நம்பியூருக்கு இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றனா். கவுந்தப்பாடியை அடுத்த கண்ணாடிப்புத்தூா் அருகே சாலை வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர புளியமரத்தில் மோதியது.

இதில், தூக்கிவீசப்பட்ட காா்த்திக், சங்கா் இருவரும் பலத்த காயமடைந்து அந்த இடத்திலேயே இறந்தனா். கவுந்தப்பாடி போலீஸாா் அங்குச் சென்று இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT