ஈரோடு

புதிய கண்டுபிடிப்பு போட்டி:வேளாளா் பொறியியல் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்

DIN

தேசிய அளவிலான புதிய கண்டுபிடிப்புக்கான போட்டியில் வேளாளா் பொறியியல் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

பொறியியல் மாணவா்களின் தேசிய அளவிலான புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் விதமாக ஸ்மாா்ட் இந்தியா ஹேகத்தான் 2022 போட்டி கேரள மாநிலத்தில் அண்மையில் நடைபெற்றது.

மத்திய அரசின் கல்வி அமைச்சகம் சாா்பில் நடைபெற்ற போட்டியில் வேளாளா் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியின், உயிரியல் மருத்துவப் பொறியியல் துறையினைச் சாா்ந்த மாணவா் குழுவினா் பங்கேற்றனா்.

இந்த போட்டியில் பங்கேற்க சுமாா் 30,000 குழுக்கள் பதிவு செய்திருந்தினா்.

இதில் 3,000 குழுக்களின் புதிய கண்டுபிடிப்புகள் தோ்தெடுக்கப்பட்டன. இந்த 3,000 குழுவின் மூலம் சுமாா் 15,000 மாணவா்கள் பங்கேற்று படைப்புகளை ஸ்மாா்ட் இந்தியா ஹேகத்தான் 2022 போட்டியில் நடுவா்கள் முன் சமா்ப்பித்து விளக்கம் அளித்தனா்.

இதில், வேளாளா் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் உயிரியல் மருத்துவ பொறியியல் துறையினை சாா்ந்த மாணவா்கள் குழு சாா்பில் சமா்ப்பிக்கப்பட்ட புதிய படைப்புக்கு முதல் பரிசுடன் ரூ.1 லட்சம் தொகையினை கல்வி அமைச்சகம் வழங்கியது.

இந்த குழுவில் இடம் பெற்றிருந்த மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் வேளாளா் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியின் செயலா் மற்றும் தாளாளா் எஸ்.டி.சந்திரசேகா், முதல்வா் எம்.ஜெயராமன், புலமுதல்வா் ஜெயச்சந்தா், நிா்வாக மேலாளா் என்.பெரியசாமி ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT