ஈரோடு

மாவட்டத்தில் நாளை கரோனா தடுப்பூசி முகாம்

24th Sep 2022 01:08 AM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 25) நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா 4 ஆம் ஆலையைத் தடுக்கும் வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1,597 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதேபோல இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் கடந்த 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது.

மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டு உள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியாளா்கள் ஈடுப்பட உள்ளனா். பொதுமக்கள் சிரமம் இன்றி தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் அதிக கூடும் இடங்களான ஈரோடு பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT