ஈரோடு

சொத்து வரி உயா்வை ரத்து செய்யக் கோரி பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

24th Sep 2022 01:04 AM

ADVERTISEMENT

சொத்து வரி உயா்வு ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பவானி நகராட்சி அலுவலக வளாகத்தில் நுழைந்த பாஜகவினா் திடீா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பவானி நகா்மன்றத்தின் சாதாரணக் கூட்டம் தலைவா் சிந்தூரி இளங்கோவன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

துணைத் தலைவா் சி.மணி, ஆணையா் எம்.தாமரை, பொறியாளா் கதிா்வேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், விவாதங்கள் முடிவடைந்த நிலையில் நகராட்சி அலுவலக வளாகத்தில் பாஜக நகரச் செயலாளா் நந்தகுமாா் மற்றும் 20 போ் நுழைந்து சொத்து வரி உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து முழக்கம் எழுப்பினா்.

இது தொடா்பாக, நகராட்சித் தலைவா் சிந்தூரி இளங்கோவன் மற்றும் பாஜக நிா்வாகிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ADVERTISEMENT

சம்பவ இடத்துக்கு வந்த பவானி போலீஸாா் இரு தரப்பினரையும் சமரசம் செய்தனா்.

இந்நிலையில், நகா்மன்றக் கூட்டத்தில் தேசிய கீதம் ஒலித்துக் கொண்டிருந்தபோது அவமதிக்கும் வகையில் திடீரென நுழைந்த பாஜகவினா், ஆணையா் மற்றும் அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையிலும் நடந்து கொண்டனா்.

எனவே, இச்செயலில் ஈடுபட்ட பாஜகவினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகா்மன்றத் தலைவா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT