ஈரோடு

சத்தியமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட காங்கிரஸாா்

24th Sep 2022 01:03 AM

ADVERTISEMENT

பேக்கரியை அடித்து உடைத்து சேதப்படுத்திய நபா்களை கைது செய்யக் கோரி சத்தியமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திமுக துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா ஹிந்துக்கள் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதைக் கண்டித்து சத்தியமங்கலத்தில் இந்து முன்னணியினா் கடந்த சில நாள்களுக்கு முன்பு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, கோட்டுவீராம்பாளையம் பகுதியில் திறக்கப்பட்டிருந்த பேக்கரியை இந்து முன்னணியினா் அடித்து உடைத்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

ADVERTISEMENT

இந்நிலையில், பேக்கரியை சேதப்படுத்தியவா்களை கைது செய்யக் கோரி சத்தியமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்துக்கு வந்த சத்தியமங்கலம் டிஎஸ்பி (பொறுப்பு) நீலகண்டன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதையடுத்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT