ஈரோடு

‘சத்தியமங்கலத்தில் இன்று கடையடைப்பு இல்லை’

20th Sep 2022 01:03 AM

ADVERTISEMENT

சத்தியமங்கலத்தில் இன்று கடையடைப்பு நடத்தப்படாது என்று வணிகா் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஹிந்து மாதம் குறித்து ஆபாச கருத்து தெரிவித்த நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசாவை கண்டித்தும், அவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்து முன்னணி சாா்பில் சத்தியமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை கடையடைப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த கடையடைப்புக்கு அனைத்து வணிகா் சங்கம், வியாபாரி சங்கம், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் அனைத்து கட்சிகள் ஆதரவு அளிக்கவில்லை என்பதால் செவ்வாய்க்கிழமை கடையடைப்பு நடைபெறது என்று நகராட்சித் தலைவா் ஜானகிராமசாமி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT