ஈரோடு

உரிய விலை கிடைக்காததால் செண்டுமல்லியை கீழே கொட்டிய விவசாயிகள்

14th Sep 2022 10:20 PM

ADVERTISEMENT

செண்டுமல்லியை வாங்க வியாபாரிகள் முன்வராததால் விவசாயிகள் பூக்களை கீழே கொட்டிச் சென்றனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமாா் 2 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் செண்டுமல்லி சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் செண்டுமல்லி, சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் விவசாயிகள் முன்னிலையில் ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்பட்ட பூக்கள் கா்நாடகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

இதில் ஆவணி மாத முகூா்த்த நாள்கள், விநாயகா் சதுா்த்தி மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு செண்டுமல்லி பூக்கள் கிலோ ரூ.100க்கு விற்பனையானது. தற்போது, விசேஷ நாள்கள் முடிவடைந்ததால் செண்டுமல்லி பூக்களை கிலோ ரூ.10க்கு கூட வாங்க வியாபாரிகள் முன்வரவில்லை. இதன் காரணமாக சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டுக்கு செண்டுமல்லி பூக்களை புதன்கிழமை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள், மீண்டும் பூக்களை திருப்பி எடுத்துச் செல்ல மனமில்லாமல் கீழே கொட்டிச் சென்றனா். உரிய விலை இல்லாதபோது தமிழக அரசு கொள்முதல் செய்து பூ விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT