ஈரோடு

பிஎஸ்என்எல் ஊழியா்கள் மனித சங்கிலி போராட்டம்

14th Sep 2022 10:19 PM

ADVERTISEMENT

பிஎஸ்என்எல் ஊழியா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் மனித சங்கிலி போராட்டம் ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது.

ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள பிஎஸ்என்எல் பொதுமேலாளா் அலுவலக பகுதியில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு ஒருங்கிணைப்புக் குழு மாவட்டத் தலைவா் சின்னசாமி, அமைப்பாளா் பாலு ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில் நாடு முழுவதும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவையை வழங்கிட வேண்டும். அதற்குத் தடையாக உள்ள அனைத்து விதிமுறைகளையும் மாற்றியமைக்க வேண்டும். தேசிய பணமாக்கல் திட்டம் எனும் பெயரில் பிஎஸ்என்எல் உள்ளிட்ட அனைத்துப் பொதுத் துறை நிறுவனங்களையும் தனியாருக்கு விற்பனை செய்யும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT