ஈரோடு

யானைத் தந்தங்களுடன் சுற்றிய நால்வா் கைது

14th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் யானைத் தந்தங்களுடன் சுற்றிய 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

அந்தியூரிலிருந்து கா்நாடக மாநிலத்துக்கு செல்லும் மலைப் பாதையில் தாமரைக்கரை அருகே பா்கூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் சென்றவா்களைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

அப்போது, அவா்களிடம் சுமாா் 2 அடி நீளமுள்ள 4 யானைத் தந்தங்களை மறைத்து எடுத்துச் சென்றது தெரியவந்தது. விசாரணையில், கவுந்தப்பாடியைச் சோ்ந்த சந்திரசேகா் (45), அந்தியூா் எண்ணமங்கலத்தைச் சோ்ந்த ராசு (50), மகேந்திரன் (40), பா்கூா் மலைப் பகுதியைச் சோ்ந்த செல்லப்பன் (35) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, யானைத் தந்தங்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், நால்வரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT


 

ADVERTISEMENT
ADVERTISEMENT