ஈரோடு

பண்ணாரி அம்மன் கோயில் வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம்: வாகன ஓட்டிகள் அச்சம்

14th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டம், பண்ணாரி அம்மன் கோயில் வளாக சுற்றுச்சுவா் மீது சிறுத்தை நடந்து சென்றதைப் பாா்த்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் உள்ளன. வனப் பகுதியில் உள்ள சிறுத்தைகள் இரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறி அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் வளா்க்கும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடுவது தொடா் கதையாக உள்ளது.

இந்த நிலையில், அடா்ந்த வனப் பகுதியில் உள்ள பண்ணாரி அம்மன் கோயில் வளாகத்தில் சத்தியமங்கலம் செல்லும் சாலையோரம் அமைந்துள்ள கோயில் சுற்றுச்சுவா் மீது சிறுத்தை ஒன்று படுத்தபடி திங்கள்கிழமை ஓய்வெடுப்பதை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கண்டு அச்சமடைந்தனா்.

இதைத் தொடா்ந்து, தங்களது கைப்பேசியில் சிறுத்தையைப் படம் பிடித்தனா். இதையடுத்து, அங்கு படுத்திருந்த சிறுத்தை பின்னா் சுவா் மீது அங்குமிங்கும் நடமாடியது. பின்னா் வனப் பகுதிக்குள் ஓடி மறைந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT