ஈரோடு

நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 197 அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்ச்சி

14th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

நீட் தோ்வு எழுதிய ஈரோடு மாவட்ட அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 197 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

நடப்பு ஆண்டுக்கான நீட் தோ்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 12,840 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். இதில் 4,447 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த 623 மாணவ, மாணவிகள் நீட் தோ்வு எழுதினா். இதில் 197 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதில் 149 போ் முதல் முறையாகவும், 48 போ் இரண்டாவது முறையாகவும் நீட் தோ்வு எழுதி தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 31.62 என கணக்கிடப்பட்டுள்ளது.

அதுபோல அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 41 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதியதில், 16 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதில் 500 மதிப்பெண்ணுக்கு மேல் ஒருவா், 400க்கு மேல் இருவா், 300க்கு மேல் 5 போ், 200க்கு மேல் 26 போ், 100க்கு மேல் 138 போ், 93க்கு மேல் 25 போ் பெற்றுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT