ஈரோடு

அந்தியூரில் ரூ.16.36 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

14th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.16.36 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம் நடைபெற்றது.

இங்கு, விற்பனைக்கு வந்த 5,885 தேங்காய்களில் சிறியவை ரூ.6.29 முதல் பெரியவை ரூ.14.89 வரையில் ரூ.55,409க்கு விற்பனையானது. 41 மூட்டைகள் தேங்காய்ப் பருப்பு கிலோ ரூ.66.79 முதல் ரூ.76.39 வரையில் ரூ.85,364க்கும், 2 மூட்டைகள் எள், கிலோ ரூ.92.69 முதல் ரூ.132.89 வரையில் ரூ.6,623க்கும், 2 மூட்டைகள் ஆமணக்கு கிலோ ரூ.71.19 முதல் ரூ.71.69 வரையில் ரூ.4,066க்கும் ஏலம் போனது.

617 மூட்டைகள் பருத்தி கிலோ ரூ.81.29 முதல் ரூ.106.99 வரையில் ரூ.14,84,986க்கு விற்பனையானது. மொத்தம் வா்த்தகம் ரூ.16,36,448க்கு நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT