ஈரோடு

53 மூட்டை புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 7 போ் கைது

10th Sep 2022 04:19 AM

ADVERTISEMENT

கா்நாடக மாநிலத்தில் இருந்து பா்கூா் மலைப் பாதை வழியாக சரக்கு வாகனத்தில் கடத்திவரப்பட்ட 53 மூட்டை புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 7 பேரை கைது செய்தனா்.

பா்கூா் காவல் நிலையம் அருகே உள்ள சோதனைச் சாவடியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை அதிகாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது கா்நாடக மாநிலத்திலிருந்து வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினா்.

இதில், 53 மூட்டைகள் மற்றும் ஐந்து பெட்டிகளில் புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, சரக்கு வாகனத்தில் இருந்த இருவரிடம் நடத்திய விசாரணையில், அவா்கள் பவானி அந்தியூா் பிரிவு, டானா சாவடி தெருவைச் சோ்ந்த அருண் (36), கா்நாடக மாநிலம், கொள்ளேகால், ராமாபுரத்தைச் சோ்ந்த ரமேஷ் (60) என்பதும், கா்நாடக மாநிலத்தில் இருந்து புகையிலைப் பொருள்களை கடத்தி வந்து பவானியை அடுத்த

மயிலம்பாடியில் உள்ள கிடங்கில் பதுக்கிவைத்து விற்பனை செய்வதும் தெரியவந்தது.

மேலும் நடத்திய விசாரணையில், கோபி காசிபாளையம் பகுதியைச் சோ்ந்த அசோக்குமாா் (35), பவானி வஜ்ரவேல் பகுதியைச் சோ்ந்த (53), ரஞ்சித் (37), திருப்பதி (32), ஜெகநாதன் (48) ஆகியோருக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, 7 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT