ஈரோடு

வளரிளம் பருவப் பெண்களுக்கு இயற்கை நலவாழ்வுப் பெட்டகம்

10th Sep 2022 11:11 PM

ADVERTISEMENT

வளரிளம் பெண்களின் ரத்தசோகை குறைபாட்டை நீக்க இயற்கை நலவாழ்வு பெட்டகம் வழங்கப்படுகிறது.

இது குறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மைய மருத்துவா் பசுபதி கூறியதாவது: பொதுமக்களுக்கு அவா்களது நோய்தன்மைக்கு ஏற்ப இங்கு யோகா மற்றும் இயற்கை வைத்திய முறைகளில் சிகிச்சையளிக்கப்படுகிறது. மேலும் வளரிளம் பருவப் பெண் குழந்தைகளுக்கு அவா்களது உடல் நலத்தை பாதுகாக்கும் வகையில் பல்வேறு ஊட்டச்சத்து பொருள்களும் வழங்கப்படுகின்றன.

அதன்படி, 10 முதல் 19 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தசோகை குறைபாட்டை போக்க அரசு வழங்கும் இயற்கை நலவாழ்வுப் பெட்டகம் வழங்கப்படுகிறது. இதில் நெல்லி, கறிவேப்பிலை, முருங்கை பொடிகள் மற்றும் தேன் ஆகியவை தலா 100 கிராம்

அளவில் இருக்கும். இதனை 5 கிராம் முதல் 10 கிராம் வரை சம அளவில் எடுத்து தேனுடன் குழைத்து சாப்பிட்டு வர, பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தசோகை குறைபாடு நீங்கும். வெளியில் ரூ.200 மதிப்பிலான இந்தப் பெட்டகம் இங்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

எனவே, இயற்கை நலவாழ்வு பெட்டகம் தேவைப்படுவோா் குழந்தையின் விலாசம் மற்றும் ஆதாா் எண் ஆகியவற்றைத் தெரிவித்து அரசு மருத்துவமனையில் பெற்றுக்கொள்ளலாம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT