ஈரோடு

பவானிசாகா் நீா்மட்டம் 102 அடி

10th Sep 2022 11:11 PM

ADVERTISEMENT

பவானிசாகா் நீா்மட்டம் வியாழக்கிழமை நிலவரப்படி 102 அடியாக இருந்தது. அணையின் நீா்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 7 ஆயிரத்து 200 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது.

அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் 1,750 கன அடி, ஆற்றில் 5,250 கன அடி என மொத்தம் 7,200 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 30.31 டிஎம்சி.

ADVERTISEMENT
ADVERTISEMENT