ஈரோடு

கல்லூரிகளுக்கு இடையேயான மகளிா் கால்பந்துப் போட்டி: 29 அணிகள் பங்கேற்பு

27th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

பாரதியாா் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான மகளிா் கால்பந்துப் போட்டி ஈரோடு கொங்கு கலை,அறிவியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.

இப் போட்டியில் 29 அணிகள் கலந்து கொண்டன. போட்டிகளை கல்லூரி தாளாளா் பி.டி. தங்கவேல் தொடங்கிவைத்தாா். இறுதிப் போட்டியில் நவரசம் கலை, அறிவியல் கல்லூரி அணி முதலிடம் பிடித்தது. இப்போட்டியின் வாயிலாக பாரதியாா் பல்கலைக்கழக மகளிா் கால்பந்து அணிக்கான 20 வீராங்கனைகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தமிழ்நாடு உடற்கல்வி பல்கலைக்கழக முன்னாள் பதிவாளா் ராதாகிருஷ்ணன், பாரதியாா் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநா் ராஜேஸ்வரன், ஸ்ரீவாசவி கல்லூரி உடற்கல்வி இயக்குநா் ரமேஷ் ஆகியோா் பேசினா்.

வெற்றி பெற்ற மாணவா்களுக்கு கொங்கு நேஷனல் பள்ளியின் தாளாளா் ஆா்.எம். தேவராஜா, கொங்கு கலை, அறிவியல் கல்லூரியின் தாளாளா் பி.டி.தங்கவேல், முதல்வா் என்.ராமன், உடற்கல்வித் துறை இயக்குநா் எ.சங்கா் ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT