ஈரோடு

அதிமுக சாா்பில் பொதுமக்களுக்கு உதவிகள்

26th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

ஈரோடு மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் கட்சியின் 51ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

ஈரோடு சூரியம்பாளையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சூரியம்பாளையம் பகுதி செயலாளா் கே.சி.பழனிசாமி தலைமை தாங்கினாா். அவைத் தலைவா் எம்.ஜி.பழனிசாமி, பொதுக்குழு உறுப்பினா் லிங்கேஸ்வரன், மேட்டு நாசுவம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவா் மகேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சூரியம்பாளையம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்களுக்கு வேட்டி, சட்டை, சேலை உள்ளிட்ட பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியச் செயலாளா் கே.ஆா்.பழனிசாமி, ஈரோடு ஒன்றியக் குழு உறுப்பினா் நீலாவதி, சித்தோடு பேரூா் செயலாளா் காா்த்திகேயன், மாவட்ட மகளிா் அணி பொறுப்பாளா் விஜயா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT