பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் 100 சதவீத மானியத்தில் பனை விதைகளை விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ப.மரகதமணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தின் மாநில மரமான பனை மரம், நிலத்தடி நீரை அதிகரித்தும், மண் அரிப்பை தடுத்தும் மண்ணை உறுதிப்படுத்தி வளப்படுத்தும். அடி முதல் நுனி வரை பயனளித்து மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. எனவே, பனை சாகுபடியை ஊக்கப்படுத்த ஈரோடு மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் பனை மேம்பாட்டு இயக்க திட்டத்தில் 25,000 பனை விதைகள் விநியோகம் செய்யப்பட உள்ளது.
ஒவ்வொரு விவசாயிக்கும் அதிகபட்சமாக 50 விதைகள், 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும். நிலமுள்ள விவசாயிகளாக இருப்பின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். சம்பந்தப்பட்ட தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநரை தொடா்புகொள்ளலாம்.