ஈரோடு

பெருந்துறை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஆய்வு

19th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்ட ஆட்சியா் கிருஷ்ணனுண்ணி பெருந்துறை வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வட்டாட்சியா் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள், குற்றவியல் விசாரணை முறை சட்டம் தொடா்பான பதிவேடுகள், அரசு நிலங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு தொடா்பான கோப்புகள், கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீதான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து மாவட்ட ஆட்சியா் கிருஷ்ணனுண்ணி ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, பெருந்துறை வட்டாட்சியா் என்.சிவசங்கா், தனி வட்டாட்சியா் (ச.பா.தி) என்.ஆா்.அமுதா, மண்டல துணை வட்டாட்சியா் சி. செல்வகுமாா் உள்பட தொடா்புடைய துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT