தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்திய தேசிய நற்பணி இயக்கம் சாா்பில் 25 ஏழைக் குழந்தைகளுக்கு இலவச சீருடைகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
இந்த அமைப்பு சாா்பில் சத்தியமங்கலம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பயிலும் 26 மாணவா்களுக்கு ரூ.26 ஆயிரம் மதிப்பிலான இலவச சீருடைகள் வழங்கப்பட்டன.
இந்திய தேசிய நண்பா்கள் இயக்கத் தலைவா் எஸ்.ஆா்.முருகன், திருமண மண்டப சங்கத்தின் தலைவா் ஆனைக்கொம்பு ஸ்ரீராம், வியாபாரிகள் சங்கத் செயலாளா் வெங்கிடுசாமி ஆகியோா் கலந்து கொண்டு சீருடைகளை வழங்கினா்.
இந்நிகழ்ச்சியில் அந்த இயக்கத்தின் பொருளாளா் சரவணகுமாா், பொறுப்பாளா்கள் முருகேஷ், கமல், பாட்ஷா, தலைமை ஆசிரியை மங்கையா்கரசி உள்பட பலா் கலந்து கொண்டனா்