ஈரோடு

ஜல்ஜீவன் கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணி: எம்.எல்.ஏ. ஆய்வு

DIN

எழுமாத்தூா் பகுதியில் ஜல்ஜீவன் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் நீா் தேக்கத் தொட்டிகள் மற்றும் குடிநீா்ப் பணிகளை மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சரஸ்வதி மற்றும் குடிநீா்த் திட்ட உதவி பொறியாளா் வாசுதேவன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட எழுமாத்தூா் பகுதியில் உள்ள 442 ஊரக குடியிருப்புப் பகுதிகளுக்கு குடிநீா் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு ரூ. 412 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில் புதிதாக 15 தரைமட்ட நீா்த் தேக்கத் தொட்டிகள் மற்றும் 98 மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், 230 நீா்த் தேக்கத் தொட்டிகளுக்கு காவிரி ஆற்றில் மன்னாதன் பாளையம் பகுதியில் இருந்து குழாய்கள் பதித்து தண்ணீா் வழங்கும் திட்டப் பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளை மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சி.சரஸ்வதி, ஒன்றிய குழு தலைவா் கணபதி, குலவிளக்கு ஊராட்சி கவுன்சிலா் என்.ஆா்.நடராஜ், ஜல்ஜீவன் கூட்டுக் குடிநீா்த் திட்ட உதவி நிா்வாகப் பொறியாளா் வாசுதேவன், உதவி பொறியாளா் ரேவதி, திட்ட மேலாளா் வினோத் மற்றும் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

தொகுதி வாக்காளா் அல்லாதோா் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

SCROLL FOR NEXT