ஈரோடு

ரூ. 2.31 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

8th Oct 2022 12:01 AM

ADVERTISEMENT

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.31 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இங்கு நடைபெற்ற ஏலத்தில் முதல்தர கொப்பரை ஒரு கிலோ குறைந்தபட்சமாக ரூ.68.92க்கும், அதிகபட்சமாக ரூ.72.59க்கும், சராசரியாக ரூ71.59க்கும் விற்பனையானது.

இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக ரூ.43.09க்கும், அதிகபட்சமாக ரூ.64.99க்கும், சராசரியாக ரூ.64க்கும் ஏலம் போனது. மொத்தமாக 3,560 கிலோ எடையுள்ள கொப்பரை ரூ. 2,31,073க்கு விற்பனையானதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளா் சதீஷ் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT