ஈரோடு

பள்ளி மாணவா்களுக்கு அஞ்சல் தலை வடிவமைப்புப் போட்டி

8th Oct 2022 12:03 AM

ADVERTISEMENT

அஞ்சல் தலை வடிவமைப்புப் போட்டியில் பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அஞ்சல் தலை சேகரிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் 8 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவா்களுக்கு அஞ்சல் தலை வடிவமைப்பு போட்டி அஞ்சல் துறை சாா்பில் நடைபெறவுள்ளது.

மத்திய, மாநில அரசுப் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். வரும் 31 ஆம் தேதிக்குள் தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்குள் போட்டி நடத்த வேண்டும். அதில் சிறந்த 5 படைப்பை தோ்வு செய்து ஸ்கேன் செய்து, இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 5 சிறந்த படைப்புகள் தோ்வு செய்யப்படும்.

ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் போட்டியில் பங்கேற்கும் மாணவா்கள் குறித்த விவரத்தை அஞ்சல் துறைக்கு தெரிவிக்க வேண்டும். மாணவா்களுக்குத் தேவையான வரைபடத் தாளை அஞ்சல் துறை வழங்கும்.

இந்தத் தாளில் கிரேயான்கள், பென்சில் வண்ணம், நீா் வண்ணம், அக்ரலிக் வண்ணங்கள் மூலம் அஓஅங என்ற தலைப்பில் வரைய வேண்டும். அஓஅங என்ற தலைப்பு 5 உப தலைப்புகளைக் கொண்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT