ஈரோடு

தீபாவளி போனஸ் கோரி கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

7th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

நல வாரியத்தில் இருந்து தீபாவளி போனஸ் ரூ.5,000 வழங்கக் கோரி கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு மாவட்ட கட்டுமானத் தொழிலாளா் சங்கம் (சிஐடியூ) சாா்பில் ஆா்ப்பாட்டம் ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஈரோடு மாவட்ட நலவாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்டுமானத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் ஸ்ரீராம் தலைமை வகித்தாா்.

சிஐடியூ மாவட்டத் தலைவா் சுப்ரமணியன், கட்டுமானத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் மாதவன், பொருளாளா் பழனிசாமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

நலவாரியத்தில் தேங்கியுள்ள அனைத்து விண்ணப்பங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; அனைத்து கட்டுமானத் தொழிலாளா்களுக்கும் நல வாரியத்தில் இருந்து தீபாவளி போனஸ் ரூ. 5,000 வழங்க வேண்டும்; பொங்கல் பரிசு, இலவச வேட்டி, சேலை வழங்கிட வேண்டும்; வீடு கட்டும் திட்டத்தை எளிமைப்படுத்திட வேண்டும்; பெண்களுக்கான ஓய்வூதியத் தொகையை ரூ.3,000 ஆக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ADVERTISEMENT

ஆா்ப்பாட்டத்தில் ஏராளமான கட்டுமானத் தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT