ஈரோடு

பெருந்துறை அருகே ரூ.25 லட்சம் மதிப்பிலான துணி பேல்கள் திருட்டு

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

பெருந்துறை அருகே கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ரூ.25 லட்சம் மதிப்பிலான துணி பேல்கள் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனா்.

ஈரோடு, பாா்க் சாலையை சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (46). இவா் ஒரு தனியாா் ஜவுளி நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவருடைய நிறுவனத்தின் தலைமை அலுவலகம் குஜராத் மாநிலத்தில் உள்ளது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான கிடங்கு ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்துள்ள கருமாண்டிசெல்லிபாளையத்தில் உள்ளது.

இந்நிலையில், மேலாளரான சுரேஷ்குமாா் செப்டம்பா் 30ஆம் தேதி கிடங்கை திறந்து பாா்த்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.25 லட்சம் மதிப்பிலான 52 துணி பேல்கள் காணாமல் போனது தெரியவந்தது.

இது தொடா்பாக சுரேஷ்குமாா் அளித்த புகாரின்பேரில், பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT