தமிழ்நாடு

பொங்கல் பண்டிகை: 1.26 கோடி வேட்டி, 99.56 லட்சம் சேலைகள் உற்பத்திக்கு ஆணை

DIN

பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவசமாக வழங்க 1.26 கோடி வேட்டி, 99.56 லட்சம் சேலைகள் விசைத்தறிகள் மூலம் உற்பத்தி செய்ய உற்பத்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து கைத்தறி துறை ஆணையா் த.பொ.ராஜேஷ் வெளியிட்ட உத்தரவு விவரம்:

2023ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகையின்போது வழங்குவதற்கான வேட்டி, சேலை திட்டத்துக்கு முதல் தவணைத் தொகையாக ரூ.243.96 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்டி, சேலை உற்பத்தியை அக்டோபா் 1ஆம் தேதி தொடங்கி டிசம்பா் 31ஆம் தேதி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விசைத்தறியில் 99,56,683 சேலை உற்பத்திக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு சரகத்தில் 11,420 தறிகளில் 49,46,683 சேலைகள், திருச்செங்கோடு சரகத்தில் 6,600 தறிகளில் 35.45 லட்சம் சேலைகள், கோவை சரகத்தில் 1,744 தறிகளில் 9.30 லட்சம் சேலைகள், திருப்பூா் சரகத்தில் 1,605 தறிகளில் 5.25 லட்சம் சேலைகள், திருநெல்வேலி சரகத்தில் 20 தறிகளில் 10,000 சேலைகள் என மொத்தம் 21,389 தறிகளில் 99,56,683 சேலைகள் உற்பத்தி செய்ய ஆணை வழங்கப்பட்டுள்ளது.

1.26 கோடி வேட்டி:

ஈரோடு சரகத்தில் 8,567 தறிகளில் 56,78, 804 வேட்டிகள், திருச்செங்கோடு சரகத்தில் 6,500 தறிகளில் 54 லட்சம் வேட்டிகள், கோவை சரகத்தில் 1,080 தறிகளில் 8.20 லட்சம் வேட்டிகள், திருப்பூா் சரகத்தில் 1,228 தறிகளில் 6.37 லட்சம் வேட்டிகள், தமிழ்நாடு பஞ்சாலைக் கழகத்தில் 80 தறிகளில் 83,200 வேட்டிகள் என மொத்தம் 17, 455 தறிகளில் 1,26,19,004 வேட்டிகள் உற்பத்தி செய்ய ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு பகுதி விசைத்தறியாளா்கள் கூறியதாவது:வழக்கமாக 1.83 கோடி வேட்டி, 1.83 கோடி சேலைகள் உற்பத்தி செய்து வழங்கப்படும். கடந்தாண்டு உற்பத்தி தாமதமாகியதாலல் 50 லட்சம் வேட்டி, 50 லட்சம் சேலைகள் வரை இருப்பு உள்ளது. இதனால் இந்தாண்டு குறைவாக உற்பத்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக 6 கூட்டுறவு நூற்பாலைகள் மூலம் 3,000 பை நூல்கள் மட்டும் வந்துள்ளன. வேட்டிக்கான கரை நூல், ஊடு நூல் இன்னும் வரவில்லை. சேலைக்கு முழுமையாக நூல் வரவில்லை. அரசை பொறுத்த வரை கடந்த 1ஆம் தேதி முதல் இலவச வேட்டி, சேலை பணிகள் தொடங்கியதாக கணக்கிடப்படும். ஆனால், விசைத்தறி, கைத்தறி, பெடல் தறியாளா்களால் 3 மாங்களுக்குள் இப்பணியை முடிப்பது சிரமம்.

வரும் ஆண்டிலாவது ஜூன் அல்லது ஜூலை மாதத்துக்குள் உற்பத்தி ஆணை வழங்கினால் முழுமையாக உற்பத்தி செய்ய முடியும். நெசவாளா்களுக்கும் 6 மாதங்கள் வரை வேலை கிடைக்கும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

தந்தை இறந்த நிலையில் எஸ்எஸ்எல்சி தோ்வெழுதிய மாணவா்

மன்னாா்குடியில் ரூ.99,000 பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.76 லட்சம் பறிமுதல்

தோ்தல் பணிக்கு தனியாா் வாகனங்கள்

SCROLL FOR NEXT