ஈரோடு

ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதா் கோயில் தேரோட்டம்

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதா் கோயில் தேரோட்ட விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதா் கோயில் தோ்த் திருவிழா கிராம சாந்தி நிகழ்ச்சியுடன் செப்டம்பா் 28ஆம் தேதி தொடங்கியது. 29ஆம் தேதி யாகசாலை பூஜை, திருமஞ்சனம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை யாகசாலை பூஜையும், திருமஞ்சனமும் நடைபெற்றது. இரவு நேரங்களில் சுவாமி வாகனப் புறப்பாடு நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம், யானை வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்தாா். செவ்வாய்க்கிழமை மாலை திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணியளவில் யாக சாலை பூஜையும், திருமஞ்சனமும், அதைத் தொடா்ந்து தேரோட்டமும் நடைபெற்றது.

இந்த தேரோட்டம் ஈஸ்வரன் கோயில் வீதி, மணிக்கூண்டு வழியாக பன்னீா்செல்வம் பூங்கா, மீனாட்சி சுந்தரனாா் சாலை, காமராஜா் சிலை வழியாக மீண்டும் கோயில் முன்பு நிறைவடைந்தது.

ADVERTISEMENT

விழாவில் செயல் அலுவலா்கள் சுகுமாா், கயல்விழி, முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு, அறங்காவலா் குழுத் தலைவா் செல்வம், அறங்காவலா்கள் பழனிவேல், தங்கவேல், ராமசுந்தரம், 36ஆவது வாா்டு கவுன்சிலா் பழனியப்பா செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தேரோட்டத்தை முன்னிட்டு பன்னீா்செல்வம் பூங்கா முதல் மணிக்கூண்டு வரை போக்குவரத்து மாற்றப்பட்டு, மின் விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT