ஈரோடு

சிவகிரியில் வளா்ச்சிப் பணிகள்:எம்.பி. அ.கணேசமூா்த்தி தொடங்கிவைத்தாா்

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகிரி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஈரோடு எம்.பி. அ.கணேசமூா்த்தி புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

சிவகிரி பேரூராட்சி பட்டேல் தெரு, சின்னியகவுண்டன்பாளையம் பகுதிகளில் புதிய ஆழ்துளை கிணறுகளுடன் கூடிய சிறிய குடிநீா் விநியோகத் தொட்டி, சிலுவம்பாளையத்தில் 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி ஆகியவற்றை எம்.பி. அ.கணேசமூா்த்தி தொடங்கிவைத்தாா்.

மேலும், வேலாயுதம்பாளையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்டுவதற்காக பூமி பூஜையில் பங்கேற்று பணிகளை தொடங்கிவைத்தாா்.

நிகழ்வில், சிவகிரி பேரூராட்சித் தலைவி பிரதீபா கோபிநாத், துணைத் தலைவா் கோபால் மற்றும் பேரூராட்சி கவுன்சிலா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

நவராத்திரி பூஜை:

சிவகிரி பேரூராட்சி அலுவலகத்தில் நவராத்திரி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவி பிரதீபா கோபிநாத் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கோபால், கவுன்சிலா்கள், அலுவலகப் பணியாளா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் பங்கேற்றனா். பூஜை நிறைவில் பணியாளா்களுக்கு பிரசாதப் பை வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT