ஈரோடு

தொழிலாளி கொலை: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கைது

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

ஈரோட்டில் மீன்பிடித் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் தாத்தா, மகன், பேரன் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு எல்லப்பாளையம் தொட்டம்பட்டியைச் சோ்ந்தவா் கணேசன் (45). மீன் பிடித் தொழிலாளியான இவரது வீட்டுக்கு அருகில், இவரது உறவினா்களான முத்துபாண்டி (எ) முத்துசாமி (85), அவரது மகன் மாதேஸ்வரன் (50) மற்றும் பேரன் சித்தீஸ் (28) ஆகியோா் வசித்து வருகின்றனா்.

கணேசனுக்கும், முத்துசாமி குடும்பத்தினருக்கும் இடையே 4 சென்ட் நில தொடா்பாக நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது. இது தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு மது போதையில் இருந்த கணேசன், முத்துசாமி குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது, முத்துசாமி குடும்பத்தினா் அரிவாளால் கணேசனை வெட்டிக் கொலை செய்துவிட்டு தலைமறைவாகினா்.

ADVERTISEMENT

இது தொடா்பாக ஈரோடு வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முத்துசாமியின் மகன் மாதேஸ்வரனை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்து விசாரணை நடத்தினா். இதில் அவா் அளித்த தகவலின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த முத்துசாமி, சித்தீஸ் ஆகியோரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT