ஈரோடு

சாயக்கழிவுகளை சுத்திகரித்து கடலில் விடும் திட்டத்தை செயல்படுத்தக் கோரிக்கை

DIN

சாயப்பட்டறைகள், தொழிற்சாலைகள் கழிவு நீரை சுத்திகரித்து கடலில் விடும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா கோரிக்கை விடுத்துள்ளாா்.

தமிழகத்தில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தங்கள் தொகுதியில் தீா்க்கப்பட வேண்டிய 10 பிரச்னைகளை மனுவாக ஆட்சியா் மூலம் வழங்க அறிவித்திருந்தாா்.

இதன்படி ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ இ.திருமகன் ஈவெரா மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கூடுதல் ஆட்சியா் லி.மதுபாலனிடம் 10 கோரிக்கைகள் அடங்கிய மனுவை திங்கள்கிழமை அளித்து முதல்வரிடம் வழங்க வலியுறுத்தினாா்.

பின்னா் எம்எல்ஏ திருமகன் ஈவெரா செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

ஈரோட்டில் புதை சாக்கடை திட்டம், ஊராட்சிக்கோட்டை குடிநீா் திட்டப்பணி மூலம் சேதமான சாலைகள், சிமென்ட் தளங்களை புதுப்பிக்க வேண்டும். முதல்வரின் தொலைநோக்கு திட்டமான சாயப்பட்டறைகள், தொழிற்சாலைகள் கழிவு நீரை சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, சுத்திகரித்து கடலில் விடும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

ஈரோடு மாநகரில் மழை, வெள்ள நீா் தேங்கி, கடைகள், பள்ளிகள், வீடுகளில் புகுவதை தடுக்க நவீன சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை தீா்க்க ஈரோடு வட்டாட்சியா் அலுவலகம் அருகே அரசுக்கு சொந்தமான காலியிடத்தில் நவீன வாகன நிறுத்தம் அமைக்க வேண்டும்.

வஉசி பூங்கா மைதானத்தை புனரமைத்து மாணவா்கள், இளைஞா்கள் விளையாட்டு மைதானம், நவீன உடற்பயிற்சிக் கூடம் அமைக்க வேண்டும். மாநகராட்சி எல்லையில் அரசு ஆவணங்கள் இருந்தும் பட்டா இல்லாத 3,000 குடியிருப்புகள், வணிக நிறுவனங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.

மாநகராட்சி 1ஆவது மண்டலம் அக்ரஹாரம் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். மாநகரில் புதிதாக பத்திரப் பதிவு அலுவலகம் அமைக்க வேண்டும். ஈரோடு-மேட்டூா் சாலை முதல் பேருந்து நிலையம் வரை மேம்பாலம் அமைத்து போக்குவரத்தை சீரமைக்க வேண்டும்.

திடக்கழிவு மேலாண்மைப் பணியை மேம்படுத்த 1ஆவது மண்டலத்தில் அக்ரஹாரம், வீரப்பன்சத்திரம், 2ஆம் மண்டலம் குமலன்குட்டை, கோட்டை, 3ஆம் மண்டலம் பெரியாா் நகா், 4ஆம் மண்டலம் கருங்கல்பாளையம் பகுதியில் குப்பைகளை தரம் பிரித்து எடுத்துச் செல்ல இடம் தோ்வு செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கைகளாக தெரிவித்துள்ளேன் என்றாா்.

முன்னாள் மாவட்ட தலைவா் ராஜேந்திரன், மண்டலத் தலைவா் விஜயபாஸ்கா், பொதுக்குழு உறுப்பினா் செந்தில்ராஜன் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT