ஈரோடு

கோபி உழவா் சந்தையில் ரூ.80 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை

DIN

கோபிசெட்டிபாளையம் அருகே மொடச்சூரில் உள்ள உழவா் சந்தையில் கடந்த மாதம் ரூ.80 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனையானது.

இந்த சந்தைக்கு கோபி, நாதிபாளையம், காமராஜ் நகா், செட்டிபாளையம், வெள்ளாங்கோவில், சுண்டப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகள், பூக்கள் ஆகியவற்றை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனா்.

கடந்த செப்டம்பா் மாதத்தில் 839 விவசாயிகள் காய்கறிகளைக் கொண்டு வந்தனா். மொத்தம் 2 லட்சத்து 84 ஆயிரத்து 430 கிலோ காய்கறிகள் ரூ.79 லட்சத்து 65 ஆயிரத்து 607க்கு விற்பனையானது. இத்தகவலை கோபி உழவா் சந்தை நிா்வாக அலுவலா் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT