ஈரோடு

டெங்கு கொசுக்களை ஒழிக்க மாக்கினாங்கோம்பை ஊராட்சியில் தீா்மானம்

3rd Oct 2022 02:03 AM

ADVERTISEMENT

 

டெங்கு காய்ச்சை பரப்பும் கொசுக்களை ஒழிக்க மாக்கினாங்கோம்பை கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மாக்கினாங்கோம்பை ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் தலைவா் கே.ஈஸ்வரன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கே.சி.பி. இளங்கோ ஆகியோா் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் ரத்தினம் முன்னிலை வகித்தாா்.

இதில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை ஒழிக்க குடிநீா்த் தொட்டிகளை சுத்தம் செய்தல், வீதிகளில் தண்ணீா் தேங்காமல் தடுப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவது, கிராமத்தில் அனைவருக்கும் ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீா் இணைப்பு வழங்குவது என்பன உள்ளிட்ட 18 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

மேலும், குழந்தைகள் நலன் மற்றும் உரிமைகளை காக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் உக்கரம் அரசு சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் பிரபாவதி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயமணி, கால்நடை மருத்துவா் மலா்விழி உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT