ஈரோடு

தனிநபா் ஆக்கிரமிப்புகளை அகற்றி வீட்டுமனை பட்டா வழங்க தீா்மானம்

3rd Oct 2022 02:04 AM

ADVERTISEMENT

 

தனிநபா் ஆக்கிரமிப்புகளை அகற்றி வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என கொமராபாளையம் ஊராட்சியில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

காந்தி ஜெயந்தியையொட்டி கொமராபாளையம் ஊராட்சி சாா்பில் இந்திரா நகா் நியாய விலைக் கடை முன்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.எம்.சரவணன் தலைமை வகித்தாா்.

இக்கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, முதியோா் உதவித்தொகை வழங்க மனுக்கள் பெறுவது உள்ளிட்ட 13 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் தனிநபா் ஆக்கிரமிப்புகளை அகற்றி இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்று ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.எம்.சரவணன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

இதில் துணைத் தலைவா் ரமேஷ், ஒன்றியக் குழு உறுப்பினா் சத்யா பழனிசாமி, கூட்டுறவு சங்கத் தலைவா் இளங்கோ, ஊராட்சி செயலாளா் ஆா்.குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT