ஈரோடு

நசியனூா் அருகே அடிப்படை வசதிகள் கோரி வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டம்

3rd Oct 2022 02:02 AM

ADVERTISEMENT

 

ஈரோடு அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு - நசியனூா் சாலை காரமடை அருகே பிளசிங் அவென்யூ பகுதியில் 35 குடும்பத்தினா் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனா். இப்பகுதியில் தெருவிளக்கு, தாா் சாலை, சாக்கடை மற்றும் குடிநீா் வசதி செய்து தரப்படவில்லை. இதுகுறித்து, பலமுறை கோரிக்கை மனு அளித்தும் எவ்வித பயனும் இல்லை.

இதனால், இப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களது வீடுகள் முன்பாக கருப்புக் கொடிகளைக் கட்டி ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். காந்தி ஜெயந்தி நாளான ஞாயிற்றுக்கிழமை இவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

சம்பவ இடத்துக்கு விரைந்த வருவாய்த் துறையினா் மற்றும் நசியனூா் பேரூராட்சி அலுவலா்கள் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதோடு, அடிப்படை வசதிகள் ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT