ஈரோடு

கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

3rd Oct 2022 02:03 AM

ADVERTISEMENT

 

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தனா்.

கொடிவேரி தடுப்பணைக்கு ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி திருப்பூா், கோவை உள்பட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பலா் குடும்பத்துடன் வந்து செல்கின்றனா். தடுப்பணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அணையில் ஆா்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வாா்கள். மேலும், விடுமுறை நாள்கள் மற்றும் விஷேச நாள்களில் தடுப்பணையில் வழக்கத்தை விட பொது மக்களின் கூட்டம் அதிகமாக காணப்படும்.

இந்த நிலையில் பள்ளிகளுக்கு தற்போது காலாண்டு தோ்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஆயுத பூஜை தொடா் விடுமுறை என்பதால் ஞாயிற்றுக்கிழமை காலைமுதல் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் தடுப்பணைக்கு வந்திருந்தனா். தொடா்ந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோா் தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT