ஈரோடு

ஒருங்கிணைந்த ஜவுளி வளாக கட்டுமானப் பணிகள் குறித்து அமைச்சா் ஆய்வு

3rd Oct 2022 02:02 AM

ADVERTISEMENT

 

ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா பகுதியில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் ரூ.51.59 கோடியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த ஜவுளி வளாக கட்டுமானப் பணிகளை தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஈரோடு ஒருங்கிணைந்த ஜவுளி வளாக கட்டுமானப் பணி ரூ.51.59 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளன. இங்கு, 292 கடைகள், நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் நிறுத்த இடவசதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 3 லட்சம் சதுரடியில் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இங்கு, ஜவுளிகள் வாங்க பேருந்தில் வந்து செல்வோருக்குத் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், கட்டுமானப் பணியினை ஆய்வு செய்த அமைச்சா் சு.முத்துசாமி கூறுகையில், இங்கு கட்டப்படும் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகத்தில் ஏற்கெனவே இருக்கும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும். காளைமாடு சிலை அருகே கட்டப்பட்டும் வணிக வளாகமும் முடிவடையும் தருவாயில் உள்ளது என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT