ஈரோடு

சாலை விபத்தில் விவசாயி பலி

1st Oct 2022 11:41 PM

ADVERTISEMENT

 

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் லாரி மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

பெருந்துறையை அடுத்த ஓலபாளையத்தைச் சோ்ந்தவா் சென்னிமலை மகன் சுப்பிரமணியம் (63), விவசாயி. இவா், தனது இருசக்கர வாகனத்தில் பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில், ஓலபாளையம் பிரிவு அருகே சனிக்கிழமை சாலையை கடக்கும்போது, அவ்வழியாக வந்த லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணியத்தை அங்கிருந்தவா்கள் மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக கூறினா்.

இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT