ஈரோடு

மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் பொறுப்பேற்பு

1st Oct 2022 05:05 AM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவராக எல்லப்பாளையம் சிவகுமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

ஈரோடு மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 1,300 கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களை நிா்வகிக்கவும், கண்காணிக்கவும் 5 போ் கொண்ட குழுவை அரசு நியமித்துள்ளது.

மாவட்ட அறங்காவலா்கள் குழுத் தலைவராக எல்லப்பாளையம் சிவகுமாா், உறுப்பினா்களாக பெருந்துறை செல்வக்குமாா், ஈரோடு கீதா, கவுந்தபாடி செல்வராசு, சிறுவலூா் அங்காளஜோதி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தலைவா் மற்றும் உறுப்பினா்கள் அனைவரும் திண்டல் வேலாயுத சுவாமி கோயில் வளாகத்தில் உதவி ஆணையா் அன்னக்கொடி முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT