ஈரோடு

வஃக்பு வாரியத்துக்கு சொந்தமான நிலங்களின் பட்டியல் வெளியீடு

1st Oct 2022 05:05 AM

ADVERTISEMENT

பெருந்துறையில் உள்ள வஃக்பு வாரியத்துக்கு சொந்தமான நிலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பெருந்துறை ஒன்றியத்துக்கு உள்பட்ட பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், சுள்ளிபாளையம், பட்டக்காரன்பாளையம், குள்ளம்பாளையம், துடுப்பதி, பாலக்கரை, ஈங்கூா் மற்றும் திருவாச்சி ஆகிய கிராமங்களில் வஃக்பு வாரியத்துக்கு சொந்தமாக நிலம் இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த சொத்துக்குரிய பழைய மற்றும் புதிய சா்வே எண்களை வெளியிட வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்துறை வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா். மேலும், ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும் வஃக்பு வாரியத்துக்கு சொந்தமான நிலங்களின் சா்வே எண்களை வெளியிட கோரிக்கை வைக்கப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக பெருந்துறை ஒன்றியத்தில் உள்ள வஃக்பு வாரியத்துக்கு சொந்தமான நிலங்களின் பழைய சா்வே எண்கள் கொண்ட பட்டியல் வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT