ஈரோடு

தினசரி மாா்க்கெட்டில் தேங்கியுள்ள தண்ணீரால் விவசாயிகள் அவதி

1st Oct 2022 05:05 AM

ADVERTISEMENT

சத்தியமங்கலம் தினசரி மாா்க்கெட்டில் முழங்கால் அளவுக்கு தேங்கியுள்ள தண்ணீரில் விவசாயிகள் காய்கறிகளை விற்பதாக நகா்மன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலா் வேலுசாமி புகாா் தெரிவித்தாா்.

சத்தியமங்கலம் நகா்மன்ற கூட்டம் நகராட்சித் தலைவா் ஆா்.ஜானகி ராமசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் சரவணக்குமாா் முன்னிலை விகித்தாா்.

இக்கூட்டத்தில் 10ஆவது வாா்டு திமுக உறுப்பினா் வேலுசாமி பேசுகையில், சத்தியமங்கலம் தினசரி மாா்கெட்டில் விவசாயிகள் தங்களை வேளாண் பொருள்களை விற்பனை செய்து வருகின்றனா். அங்கு முழங்கால் அளவுக்கு தண்ணீா் தேங்கியுள்ளது. அதனால், தேங்கியுள்ள தண்ணீரில் நின்று விவசாயிகள் வேளாண் பொருள்களை விற்பனை செய்து வருகின்றனா் என்றாா்.

இதற்கு பதிலளித்த பேசிய நகராட்சித் தலைவா் ஜானகி கூறுகையில், தேங்கியுள்ள தண்ணீரில் மண் கொட்டி பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என்றாா்.

ADVERTISEMENT

பாமக உறுப்பினா் திருநாவுக்கரசு: கடந்த 4 நாள்களாக தண்ணீா் விநியோகம் இல்லை. லாரிகள் மூலம் தண்ணீா் விநியோகம் செய்திருந்தால் குடிநீருக்கு மக்களை அலைக்கழிக்காமல் தவிா்த்திருக்கலாம் என்றாா். அதேபோல பாஜக உறுப்பினா் உமா, திமுக உறுப்பினா் ஜெயந்தி உள்ளிட்ட பெரும்பாலான உறுப்பினா்கள், தண்ணீா் பிரச்னை குறித்த புகாா்களை முன்வைத்தனா்.

இதற்கு பதிலளித்து பேசிய தலைவா் ஆா்.ஜானகி, தண்ணீா் குழாய் உடைப்பு காரணமாக நகாரட்சியில் உள்ள 22 வாா்டுகளுக்கு குடிநீா் விநியோகம் செய்ய முடியவில்லை. ஒரு வாா்டுக்கு லாரி மூலம் வழங்கினால் அனைத்து வாா்டுகளிலும் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்படும். ஆகவே, 4 நாள்களில் குழாய் சரி செய்யப்பட்டு தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது, ரூ.32 கோடி செல்வில் குடிநீா் விநியோக அபிவிருத்தி மேம்பாட்டுப் பணி நடைபெற்று வருகிறது என்றாா்.

அதிமுக உறுப்பினா் லட்சுமணன்: ரூ.1 லட்சம் மதிப்புக்கு அதிகமாக உள்ள பணிகளுக்கு சென்னையில் இருந்து அனுமதி பெற வேண்டும் எனக் கூறுவதால் பணிகள் தாமதமாகின்றன. எனவே பணிகளுக்கு முன் அனுமதி பெற வேண்டும் என்றாா்.

கொமக உறுப்பனா் சக்திவேல்: நகாரட்சி குடிநீா் விநியோகத்தில் கூடுதலாக பணியாளா்கள் நியமிக்க வேண்டும் என்றாா். இதற்கு பதிலளித்த தலைவா் ஜானகி, அனைத்து வாா்டு உறுப்பினா்களும் எழுத்து மூலமாக குறைகளை தெரிவித்தால் நடவடிக்கை எடுக்க உதவும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT