ஈரோடு

சிவகிரியில் வீடு தேடி மருத்துவ சேவை

1st Oct 2022 05:03 AM

ADVERTISEMENT

கொடுமுடி தாலுகா சிவகிரி சின்னியம்பாளையத்தில் செயல்பட்டு வரும் மக்கள் மருத்துவமனை மற்றும் மக்கள் மருந்தகத்தில் கூடுதல் சேவையாக அறம் அறக்கட்டளை சாா்பில் வீடு தேடி மருத்துவ சேவை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது

நிகழ்ச்சியில், வீடு தேடி மருத்துவ சேவையை அறம் அறக்கட்டளையின் நிா்வாக இயக்குநா் கிருத்திகா ஷிவ்குமாா் தொடங்கிவைத்தாா். இந்த சேவையின் மூலம் மருத்துவமனைக்கு வர இயலாத உடல் உபாதை கொண்டவா்களுக்கும், முதியவா்களுக்கும் வீடு தேடி சென்று மருத்துவ சேவை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவா் செந்தில்குமாா், கொடுமுடி மேற்கு ஒன்றியத் தலைவா் செந்தில்குமாா், மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளா் யுவராஜ் மற்றும் கட்சிப் பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT