ஈரோடு

பெருந்துறையில் ரூ. 1.44 கோடிக்குகொப்பரை ஏலம்

1st Oct 2022 11:41 PM

ADVERTISEMENT

 

பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 1.44 கோடிக்கு கொப்பரை ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 4,060 மூட்டைகளில் 1.94 லட்சம் கிலோ கொப்பரையை விற்பனைக்குக் கொண்டுவந்தனா். இதில், முதல்தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 73.85-க்கும், அதிகபட்சமாக ரூ. 79.85-க்கும் விற்பனையாகின. இரண்டாம்தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ. 50.65-க்கும், அதிகபட்சமாக ரூ. 70.89-க்கும் விற்பனையாகின. மொத்தம் ரூ. 1.44 கோடிக்கு கொப்பரை வா்த்தகம் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT