ஈரோடு

அவல்பூந்துறையில் ரூ.2. 44 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

1st Oct 2022 05:03 AM

ADVERTISEMENT

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.44 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம் நடைபெற்றது.

ஏலத்துக்கு 86 தேங்காய்ப் பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனா். இதில் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக ரூ.72.89க்கும், அதிகபட்சமாக ரூ.73.47க்கும், சராசரியாக ரூ.73.38க்கும், இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக ரூ.45.15க்கும், அதிகபட்சமாக ரூ.68.99க்கும், சராசரியாக ரூ.64.05க்கு ஏலம் போனது.

மொத்தமாக 3,651 கிலோ எடையுள்ள தேங்காய்ப் பருப்பு ரூ.2 லட்சத்து 44 ஆயிரத்து 393க்கு விற்பனையானதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT